ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது நகரி சட்டசபை தொகுதி. இந்த தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டி யிட்டார். இதில், ரோஜா 79,499 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷ் 76,818 வாக்குகள் பெற்றார்.
எனவே, 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வெற்றி பெற்றார். கடந்த 2014 சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரோஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரை விட 858 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
தொடக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரோஜா, அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு க்கு தாவினார். ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல போராட்டங்களை நடத்தினார். ரோஜா பிரசாரம் செய்த இடங்களில் 97 சதவீதம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் ரோஜா தான் அங்கு கேம் சேஞ்சராக மாறி உள்ளார். அதனால் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு மின்சாரத்துறை வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ரோஜா அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
Thanks for Your Comments