ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் மீனா மங்கள் என்ற பெண்மணி. பத்திரிகை யாளரான இவர் அந்நாட்டு நாடாளு மன்றத்தின் கலாசார ஆலோசக ராகவும் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்.
இந்நிலை யில், மீனா மங்கள் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இவரது உடலை கைப்பற்றி, படுகொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வருட தொடக்க த்தில் ஆப்கானிஸ் தானில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 15 பத்திரிகை யாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 9 பேர் ஒரே நாளில் பலியானதாக அறிக்கை தெரிவித் துள்ளது.
Thanks for Your Comments