மத்தியில் பாஜக தலைமை யிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், மோடி தலைமை யிலான புதிய மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளு க்கும் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப் பட்டது.
எனவே, தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் அல்லது மேல்-சபை எம்.பி.யான வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம் என பேசப்பட்டது.
ஆனால், இன்று மோடி தலைமை யிலான புதிய மந்திரிசபை பதவி யேற்ற போது, அதிமுகவைச் சேர்ந்த யாரும் அதில் இடம் பெறவில்லை.
இதே போல் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. அவருக்கும் மந்திரி சபையில் இடம் வழங்கப் படவில்லை.
Thanks for Your Comments