பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரஹலாத் மோடி அனைத்திந்திய நியாய விலைக்கடை உரிமை யாளர்கள் சங்கத்தின் துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் வாழ்ந்து வரும் இவரது மனைவி பக்வதிபென், சமீப காலமாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சைக் காக அகமதாபாத் நகரில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த பக்வதிபென் மோடி (55) உடல் நலக்குறை வால் இன்று காலை காலமானார். இங்குள்ள தால்தேஜ் பகுதியில் உள்ள இடுகாட்டில் அவரது உடல் எரியூட்டப்படும் என பிரஹலாத் மோடி குடும்பத்தினர் தெரிவித் துள்ளனர்.
Thanks for Your Comments