பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரப் துபாயில் வசித்து வருகிறார். இவர் மீது ராஜ துரோகம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற் காக 2016-ம் ஆண்டு துபாய்க்கு சென்றார். ஆனாலும் அவர் யாருடனும் பேசவோ, சந்திக்கவோ கூடாது என கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.
அவரது நரம்புகள் வலுவிழந்து நிற்பதற்கும், நடப்பதற்கும் சிரமப்பட்டு வந்தார். அவர் உடல்நிலை காரணமாக பாகிஸ்தானு க்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட்டு ஏற்றுக் கொண்டு, ஜூன் 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.
அவரது உடல்நிலை மிகவும் மோச மடைந்ததால் நேற்று அவர் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது.
Thanks for Your Comments