திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ராமச்சந்திராப் பட்டிணத்தை சேர்ந்தவர் திருநங்கை யான பபிதா ரோஸ். இவரது "ரோஸ்" டிரஸ்ட் நிறுவனத்தின் மூலம் திருநங்கை களுக்கு ஆதரவாக பல்வேறுப் போராட்டங் களை நடத்தி யுள்ளார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் திருநங்கை களுக்கு எதிராக, திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், காசு தர மறுக்கும் இடங்களில் அராஜகம் செய்வதும் கண்டிக்கத் தக்கது. எனவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர் பேசியது சர்ச்சைக் குள்ளாகி, இவரது வீட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப் பட்டது.
திருநங்கையுடன் காதல்
இந்நிலையில், திருநங்கை பபிதா ரோஸின் வீட்டில் யாரோ மர்மநபர்கள் கல்வீசி தாக்குவதாக பாவூர் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. அப்போது, அங்கு எஸ்.ஐயாக இருந்தவர் விஜய சண்முகநாதன். இந்தப் புகார் சம்பந்தமாக அடிக்கடி பபிதா ரோஸை சந்திக்க செல்ல, இருவருக்கும் காதல் உண்டானது.
இதை யடுத்து திருநங்கை பபிதா ரோசை விஜய சண்முகநாதன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் விஜய சண்முக நாதனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து திருநங்கை பபிதா ரோஸை அவர் திருமணம் செய்தது பின்னர் தெரிய வந்தது.
ஏமாற்றிய காவலர்
இந்நிலையில் எஸ்.ஐ. தன்னை ஏமாற்றி திருமணம் செய்து நகைப் பணத்தை அபகரித்துக் கொண்ட தாக அம்பா சமுத்திரம் காவல்நிலைய எஸ்.ஐ. விஜய சண்முகநாதன் மீது மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமாரிடம் திருநங்கை பபிதா ரோஸ் புகார் அளித்துள்ளார்.
Thanks for Your Comments