உணவாக தன் குடலையே தரும் மீன் !

0
எதிரிகளுக்கு உணவாக தன் குடலையே தரும் அரிய இனம் : எதிரிகளிட மிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் கடல் வெள்ளரி மீன் இனங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படு கின்றன.
உணவாக தன் குடலையே தரும் மீன்


உணவிற்கும், உயிர் பிழைக்கவும், இனப்பெருக்கம் செய்வதிலும் பல வினோதங்கள் மீன் இனங்களிடம் உண்டு. உணவு, இடம் பாதுகாப்புக்கு ஒன்றை யொன்று சார்ந்திருத்தல், இருபாலரும் உறவால் பலன் பெறுதல் என எத்தனையோ உறவு மலர்கள்.
அவற்றுள் சற்று வித்தியாசமானது கடல் வெள்ளரி. இவை தன் உடலினுள் மீனொன்று பதுங்கி வாழ அடைக்கலம் தருகிறது. சேற்றின் அழுக்கை தின்று, சுத்தப்படுத்தும் இயல்பு கொண்டது.


இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கடல் வெள்ளரி, ஆள் விழுங்கி மீன்களிட மிருந்து தப்பிக்க பல தந்திரங்களை கையாள்கிறது. அவற்றுள் ஒன்றுதான் தனது குடலையே வெளியேற்றி விடுவது.

தாக்க வரும் இனம் அதை தின்று விட்டு போய் விடும். குடலில்லாத வெள்ளரி மீனுக்கு மீண்டும் குடல் உருவாகி விடும். இவை மன்னார் வளைகுடா பகுதி கடலடியில் காணப்படும் ஒரு அரிய வகை உயிரினம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings