உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்பரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்று தொடங்கி வரும் ஜூலை மாதம் 14ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் 45 லீக் போட்டிகள், 3 நாக்-அவுட் போட்டிகள் என சுமார் 12 நகரங்களில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும். இதில் 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோத உள்ளன.
இந்நிலையில் உலக கோப்பை தொடங்குவதை முன்னிட்டு, கிரிக்கெட்டின் பிறப்பிடமான லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் நம்பர் 1 வீரரான விராட் கோலியை கவுரப்படுத்தும் விதமாக அவரது மெழுகு சிலை தத்ரூபமாக வைக்கப் பட்டுள்ளது.
விராட் கோலியின் இந்த மெழுகு சிலை வரும் ஜூலை 15ம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனை முன்னிட்டு லண்டனில் இருக்கும் கோலியின் ரசிகர்கள் நேரில் சென்று பார்வையிட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டு சமூக வலைத் தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
விராட் கோலியுடன் இணைந்து கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மெழுகு சிலையும் வைக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments