கிழிந்த ஷூவை அணிந்து ஓடியது ஏன்? - கோமதி !

0
கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக் கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். கோமதியின் சொந்த ஊர் திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள முடிகண்டம் கிராமம் ஆகும். 
கிழிந்த ஷூவை அணிந்து ஓடியது ஏன்?
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பல சோதனைகளை கடந்து ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக் கிறது. இந்த நிலையில் அவர் நேற்று அவரது சொந்த ஊரான முடிகண்டம் கிராமத்திற்கு வந்தார். அவருக்கு பொது மக்கள், அரசியல் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவரை கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து, பாராட்டி வாழ்த்தினார். பின்னர் அவரிடம் நிருபர்கள், தடகள போட்டியில் பங்கேற்ற போது, கிழிந்த ஷூ அணிந்து பங்கேற்றது தொடர்பாக சமூக வலைத் தளங்களில் படத்துடன் வைரலாக பரவி வரும் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘நான் சிறிது கிழிந்த ஷூ தான் அணிந்திருந்தேன். 

அந்த ஷூ எனக்கு அதிர்ஷ்டமான ஷூ. அதனால் நான் அதனை விரும்பி அணிந்திருந்தேன். 2 ஷூக்களின் நிறம் மாறி இருப்பது டிசைன் தான், வேறொன்று மில்லை. சமூக வலைத் தளங்களில் அந்த படத்தை தவறாக சித்தரித்து ப திவிட்டுள்ளார்கள்’’ என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த இலக்கு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெல்வதே ஆகும். 

என்னை இதற்கு முன்பு பலருக்கு தெரியாது. அதனால், யாரும் எனக்கு ஸ்பான்சர் செய்ய வில்லை. தற்போது என்னை எல்லோருக்கும் தெரிகிறது. அதனால் நிறைய பேர் ஸ்பான்சர் செய்ய முன் வருகிறார்கள். அரசும் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் எனக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறி யுள்ளது என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings