இளம் பெண்கள் ஏராளமானோர் கருக்கலைப்பில் சிக்கிய அவலம் !

0
திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே அவலூர் பேட்டை சாலையில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில், சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் செயல் படுவதாக புகார் வந்தது. கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி ஆகியோர் அங்கு திடீர் நேரடி ஆய்வு நடத்தினர். அப்போது பேன்சி ஸ்டோருக்கு உள்ளே சிறிய அறையில் படுக்கை வசதியுடன் கூடிய கருக்கலைப்பு மையம் செயல்பட்டது கண்டு பிடிக்கப் பட்டது.
இளம் பெண்கள் கருக்கலைப்பில் சிக்கிய அவலம்


மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அன்பரசி மற்றும் குழுவினர் அந்த அறையில் சோதனை நடத்தினர். கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரை களை பறிமுதல் செய்தனர். சட்ட விரோத கருக்கலைப்பு மையத்துக்கு சீல் வைக்கப் பட்டது. கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் திருவண்ணாமலை கிருஷ்ணா நகரை சேர்ந்த கவிதா (வயது 41), அவரது கணவர் பிரபு (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 
அவர்கள் மீது ஐ.பி.சி. 419, 420, 315 மற்றும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் ஆக்ட் 1956 15(3) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலி பெண் டாக்டர் கவிதா 10-ம் வகுப்பும், கணவர் பிரபு பிளஸ்-2 படித்துள்ளனர். தன்னுடைய மெடிக்கல் ஷாப்பில் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்த குற்றத்துக் காக ஏற்கனவே 2 முறை பிரபு கைது செய்யப் பட்டவர். கருக்கலைப்பு மையத்தின் நுழைவு பகுதியில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை யும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அதில், நாளொன்றுக்கு சராசரியாக 2 அல்லது 3 பெண்கள் வந்து சென்றுள்ளனர். அவர்களில் ஏராளமானோர் திருமண மாகாத இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் வந்து சென்றது பதிவாகி யுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது. ஒரு குறிப்பிட்ட சில நபர்கள் இவர்களை அழைத்து வருவதும் பதிவாகி உள்ளது. அவர்கள் இடைத் தரகர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அங்கு ஏராளமான கர்ப்பிணி பெண்களின் ஸ்கேன் ரிப்போர்ட்டு களும் சிக்கி இருக்கிறது. ஸ்கேன் மூலம் பெண் குழந்தை என உறுதி செய்த பிறகு, இங்கு கருக்கலைப்பு நடத்திருக்கலாம் என தெரிகிறது. கடந்த 10 ஆண்டுக ளாக கருக்கலைப்பு மையம் செயல் பட்டிருப்பதால், 4 ஆயிரம் பெண் சிசுக்கள் வரை கருவில் கொல்லப் பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.

பெண் குழந்தைகள் வேணடாம் என நினைக்கும் பெண்கள், திருமணத் துக்கு முன்பு கருவுறும் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் போன்றோர் இந்த கருக்கலைப்பு மையத்துக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உத்தர விட்டிருப்பதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார். கருக்கலைப்பு மையத்துடன் தொடர்புடைய இடைத் தரகர்கள், ஸ்கேன் சென்டர்கள் ஆகிய வற்றையும் கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


இங்கு கைப்பற்றிய செல்போன் எண்களின் விபரங்கள் அடிப்படையில் விசாரணை தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்களின் விபரங்களை எந்த வகையிலும் வெளியிட க்கூடாது என கலெக்டர் உத்தர விட்டுள்ளார். 
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து இடைத் தரகர்கள் இங்கு பெண்களை அழைத்து வந்திருப்பதும், ஒவ்வொரு பெண்ணிடமும் அதிக பட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பணம் வசூலித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் யாருக்கேனும் இதில் தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரணை தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings