நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக் கொள்வதற்கு பல போராட்டங் களை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத் தான் உள்ளது .நம் அனைவருக்கும் இது நாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர் தான் என்று மட்டும் தான் அறிந்து இருக்கிறோம் .
ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவது போல் நீர் உள்ளது என்றால் நம்புவீர்களா ?
கடல் நீரில் பொதுவாக உப்பின் அளவு மாறுப்படலாம் ஆனால் மொத்த நீரும் இயற்கை யாக நல்ல நீராக மாறுவது என்பது ஒரு அதிசய நிகழ்வுதான் . இந்த அதிசய நிகழ்விற்கு முக்கிய காரணம் ஒரு நதி. ஒரு நதியின் நீர் பாய்ந்தா கடல் நல்ல நீராக மாறுகிறது என்பது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகம் தான் எனலாம்.
ஆனால் இந்த நிகழ்வு உண்மையான ஒன்று தான் என்று சொல்கிறது பல ஆய்வுகள். அந்த நதிதான் அமேசான் நதி 6000 கி. மீ நீளம் விரிந்து பல அதிசயங் களையும் பல மர்மங்களையும் கொண்டு உலகத்தில் மிகப்பெரும் நதியாக ஓடிக்கொண்டி ருக்கும்.
இந்த நதியில் மட்டும்தான் உலகத்தில் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு நீர் ஓடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் கலந்த பின்பும் இதன் தன்மை மாறாமல் 280 கி. மீ தொலைவிற்கு மொத்த கடல் நீரையும் தூய்மையான நீராக மாற்றிக் கொண்டு இருக்கிறதாம்.
சமாதியில் தன் சொகுசு காரை புதைத்த கோடீஸ்வரர் !இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் 280 கி.மீ தொலைவைக் கடந்த பிறகு தான் உப்பு நீரிடம் போராடி தோற்றுப் போவதாக ஆய்வு கூறுகிறது. அமேசான் அமேசு(ஸ்) என்றாலே ஆச்சர்யம் என்று அர்த்தம் . இப்பொழுது தான் தெரிகிறது இந்த நதிக்கு அப்படி ஒரு பெயர் வைத்தது பொருத்தமான ஒன்று தான்.
Thanks for Your Comments