இந்தியாவுக்கு 55 நாடுகள் ஆதரவு !

0
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர மில்லாத உறுப்பினர் பதவிக்கு இந்தியாவு க்கு, ஆசிய பசிபிக் மண்டலத்தை சேர்ந்த 55 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. இதன் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் (2021-2022 ) ஆகும்.
இந்தியாவுக்கு 55 நாடுகள் ஆதரவு



ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தரம் அல்லாத இந்த உறுப்பினர் பதவியில், இந்தியா ஏழு முறை (1950- 51- 19670 28,1972 - 73, 1977- 78, 1984-85, 1991-92 மற்றும் 2011-12) பதவி வகித்துள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்து ஐ.நா.,விற்கான இந்திய பிரதிநிதி சையத் அக்பருதீன் கூறியதாவது: முக்கியமான நடவடிக்கை. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத, இரண்டு ஆண்டு பதவிக் காலம் கொண்ட பதவிக்கு, இந்தியா விற்கு ஆசியா பசிபிக் மண்டலத்தை சேர்ந்த 55 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன என கூறியுள்ளார்.

2021- 22ம் ஆண்டு காலத்தில், 5 உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்க உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings