தென்கிழக்கு ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான
சிஹானோக் வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்தை உருவாக்கி வருகிறது.
இந்த கட்டிடத்தின் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று வழக்கம் போல் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்துக் கொண்டி ருந்தனர்.
அப்போது திடீரென்று ஒட்டு மொத்த கட்டிடமும் சில நொடிகளில் நொறுங்கி விழுந்து தரை மட்டமானது.
இடிபாடுகளு க்குள் சிக்கிய சுமார் 50 தொழிலாளர் களை மீட்க தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.
20-க்கும் அதிகமான வர்கள் படுகாயங் களுடன் மீட்கப்பட்ட நிலையில் 7 பிரேதங்களும் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
Thanks for Your Comments