உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் வீரர் ஷிகர் தவான், பெருவிரல் எலும்பு முறிவால் உலக கோப்பை அணியில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக ரிஷப் பந்த் களம் இறங்கினார்.
தவானை தொடர்ந்து தசைப் பிடிப்பால் புவனேஷ் குமார் அடுத்த 3 போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப் பட்டது. இதனை யடுத்து இன்று இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத வுள்ளன. இதற்கான பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந் தனர்.
அப்போது வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, விஜய் சங்கருக்கு பந்து வீசினார். பேட்டிங்கில் இருந்த விஜய்க்கு கணுக்காலில் அடிப்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப் பட்டது. இச்சம்பவம் குறித்து பும்ரா கூறியதாவது:
பேட்ஸ்மேன் களை தாக்க வேண்டும் என்பது எங்கள் டார்கெட் அல்ல. ஆனால், சில சமயங்களில் இப்படி தான் நடக்கும். இது எதிர் பாராமல் நடந்த ஒன்று. மேலும் விஜய்க்கு அடிப்பட்டது துரதிர்ஷ்ட வசமான ஒன்று.
சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தான் ஆக வேண்டும். இப்போது விஜய் நலமாக உள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தவான் நன்றாக விளையாடினார்.
அவருக்கு காயம் ஏற்பட்டதால் விலகினார். இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தவான் விலகல் குறித்த கவலையில் இருந்து இந்தியா மீண்டு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments