கட்டுமான தொழில் சக்கரவர்த்தி பெண்களிடம் ரூ.7 கோடி பறித்தது எப்படி?

0
திருமண ஆசை காட்டி, டாக்டர்கள், மென் பொறியாளர்கள் என, ஒன்பது பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த துடன், அவர்களிடம் இருந்து, 7 கோடி ரூபாய்க்கும் மேல் பறித்த காமுகனை, போலீசார் கைது செய்தனர்.
கட்டுமான தொழில் சக்கரவர்த்தி பெண்களிடம் ரூ.7 கோடி பறித்தது எப்படி?

திருவண்ணாமலை, செல்வ விநாயகர் நகரை சேர்ந்தவன், சக்கரவர்த்தி, 34. சென்னையை சேர்ந்த, டாக்டர் உட்பட, ஒன்பது பெண்களின் கற்பை சூறையாடி, 7 கோடி ரூபாய் வரை சுருட்டி உள்ளான். 


இவனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஜூன், 17ல், கைது செய்து, நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது, போலீசாரிடம் சக்கரவர்த்தி அளித்து உள்ள வாக்குமூலம்: 

எம்.இ., படித்துள்ளேன். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த, ஆனந்தியை, 2017ல், திருமணம் செய்தேன். 

எங்களுக்கு, 2 வயதில், பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு முன், 'சக்கரவர்த்தி பில்டர்ஸ்' என்ற, கட்டுமான நிறுவனம் துவங்கி, வீடுகள் வாங்கி, விற்று வந்தேன். 

சொந்த ஊரில், ஆடம்பரமாக பங்களா கட்டி வசித்து வந்தேன். விலை உயர்ந்த, மூன்று சொகுசு கார்களையும் வாங்கினேன்.


ஆறு ஆண்டுகளுக்கு முன், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனாளி யாகும் நிலை ஏற்பட்டது. ஆடம்பர வாழ்க்கை யையும் விட முடியவில்லை. 

இதனால், வரன் தேடுவது போல, 'மேட்ரிமோனி யல் வெப்சைட்' வாயிலாக, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.இ., படித்த பெண்களுக்கு குறி வைத்தேன். 

அவர்களில், கை நிறைய சம்பாதிக்கும் விதவையர், விவாகரத்து பெற்ற பெண்கள், கணவனால் கை விடப்பட்டோர் மற்றும் முதிர் கன்னிகளை தேர்வு செய்து, திருமண ஆசை காட்டினேன். 

அவர்களை சந்திக்கும் போது, ஆடம்பரமான உடை அணிந்து, சொகுசு காரில் செல்வேன்; ஆங்கிலத்தில் பேசி அசத்துவேன்.

நான் விரித்த வலையில், திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த, எம்.பி.பி.எஸ்., படித்த, 34 வயது, அரசு டாக்டர் சிக்கினார். 

விதவையான அவருடன் உல்லாசம் அனுபவித்து, 18 லட்சத்து, 70 ஆயிரம் சுருட்டினேன். அதே போல, சென்னை, அய்யப்பன் தாங்கலைச் சேர்ந்த, எம்.பி.பி.எஸ்., படித்த, 38 வயது டாக்டரும் சிக்கினார். 

நம் கண் அழகைப் பராமரிக்க !

உடல் பருமனாக இருந்ததால், தன்னை எவரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை, அவரை வாட்டியது. 

அவரை, நட்சத்திர ஓட்டல் களுக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக, சத்தியம் செய்தேன். 

தன்னையே ஒப்படைத்த அவரிடம், 6.90 லட்சம் ரூபாயை அபகரித்தேன். மதுரை பெண் அதே போல, மதுரையை சேர்ந்த, 30 வயதுடைய, பி.இ., படித்த, இரு பெண்களுடனும் உல்லாசம் அனுபவித்து, 1.15 லட்சம் ரூபாய் சுருட்டினேன். 

சென்னையைச் சேர்ந்த, மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த, 36 மற்றும் 33 வயதுடைய பெண்களை ஏமாற்றி உறவு கொண்டேன்; அவர்களிடம், 1.75 லட்சம் ரூபாய் கறந்தேன். 

திருவண்ணா மலையை சேர்ந்த, திருமணம் ஆகாத, 34 வயது பெண், 'பிசியோதெரபிஸ்ட்'டாக உள்ளார். அவரிடம் பழகி, 3 லட்சம் ரூபாய் அபகரித்தேன். 

அதே போல, திருச்சியைச் சேர்ந்த, 33 வயது பெண்ணிடம், 70 ஆயிரம் ரூபாய் பறித்தேன். கூட்டு றவு வங்கியில் வேலை பார்க்கும் அவரை, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அனுபவித்தேன். 


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த, 32 வயது பெண்ணிடம், 1.30 லட்சம் ரூபாய் சுருட்டினேன். இவர், சென்னையில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
தற்போது, இவருக்கு திருமணமாகி விட்டது. இந்த ஒன்பது பெண்களை ஏமாற்றி, 7 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டி உள்ளேன். என் நடவடிக்கை களை அறிந்து, மனைவி, அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 

என்னால் பாதிக்கப்பட்ட, லால்குடியைச் சேர்ந்த, பெண் டாக்டர், அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

போலீசார், என்னை கைது செய்து, 50 நாட்கள், திருச்சி மத்திய சிறையில் அடைத்தி ருந்தனர்.இவ்வாறு, அவன் கூறி யுள்ளான்.

எப்படி வந்தது இந்த பழக்கம்?

ஆறு ஆண்டுகளுக்கு முன், சக்கரவர்த்தியின் நண்பன் ஒருவன், 'மேட்ரிமோனியல்' இணையதளம் வாயிலாக, பெண்களை குறி வைத்து, பணம் பறிக்கலாம். 


திருமண ஆசை காட்டி, உல்லாசம் அனுபவிக்கலாம் என, யோசனை கொடுத்துள்ளான். அப்போதிருந்து, இந்த வேலையை, சக்கரவர்த்தி செய்து வந்துள்ளான். 

இவனால் பாதிக்கப் பட்ட பெண்கள், தைரியமாக புகார் அளிக்கலாம்; ரகசியம் காக்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings