தாக்குதல் மற்றும் மிரட்டல் வழக்கில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய தேனி நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது. தென்னிந்திய பார்வட் பிளாக் கட்சியின் தேனி மாவட்டம் பெரியகுளம் நகர பொதுச் செயலாளராக உள்ளவர் துரை. நுகர்வோர் அமைப்பின் தேனி மாவட்ட நிர்வாகி யாகவும் உள்ளார்.
இவர், பெரியகுளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மணல் கொள்ளை யடிக்கப் படுவதை எதிர்த்து மாவட்ட நிர்வாகத் திடம் தொடர்ச்சியாகப் புகார் தெரிவித்து வந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு துரை கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
அவரைத் தாக்கியது ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் ஆட்கள் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், ஓ.ராஜா மற்றும் நாய் சேகர், குண்டாஸ் சுரேஷ், கல்லுப்பட்டி சசி, தென்கரை சசி உள்ளிட்டவர்கள் மீது பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் துரையின் தம்பி புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார், வழக்கு பதிவு செய்யாமல், புகார் மனுவுக்கான சிஎஸ்ஆர் காப்பியை மட்டும் கொடுத்து அனுப்பி விட்டனர். அதிலும் ஓ.ராஜாவின் பெயர் சேர்க்கப்பட வில்லை. இதனால் அதிருப்தி யடைந்த துரை, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி மற்றும் மாவட்டக் காவல்கண்காணிப் பாளரிடம் புகார் தெரிவித்தார். இருந்தும் எந்தப் பலனும் இல்லை எனக் கூறப்படு கிறது.
இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் ரேஷன் கடைகளின் பொருட்கள் கொள்ளை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க ஆரம்பித்தார் துரை. இதனால் கோபமடைந்த ஓ.ராஜா, துரைக்குப் போன் செய்து மிரட்டி யுள்ளார். அந்த ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மிரட்டலைத் தொடர்ந்து தன்னை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் காவல் நிலையத்தை அறிவுறுத்த வேண்டும் என நீதி மன்றத்தை நாடினார் துரை.
இந்த வழக்கு பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த ஜுன் 4-ம் தேதி, ஓ.ராஜா உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித் துள்ளது. அதற்கான உத்தரவு நகலை துரை தற்போது பெற்றுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தர விட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments