இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான ஜதராபாத்தில் அரை கடின பாறை பகுதிகளில் நிலத்தடி நீரை மிக சுலபமாக கண்டு பிடிக்கலாம் என்று ஆய்வில் நிரூபித்துள்ளனர்.
புதிய முறையில் மிகக் குறைந்த செலவில் மின்சாரத்தை பயன்படுத்தி சுத்தமான தண்ணீரை அரை கடின பாறை பகுதியில் கண்டு பிடிக்கலாம் என்று அறிவிய லறிஞர்கள் கூறுகின்றனர்.
ஜதராபாத்தில் உள்ள தேசிய புவியமைப்பின் விஞ்ஞானிகள் நீர் பூமிக்கு அடியில் உள்ள பாறை பிளவுகளில் காணப்படுகிறது என்று
மின்கடத்தும் அளவீடுகளை கொண்டு கடின பாறையில் துளையிட்டு நீரினை பூமிக்கு மேல் கொண்டு வர முடியும் என்று ஆராய்ச்சி செய்து நிரூபித்து உள்ளனர்.
புவியிய லாளர்கள் கருத்துப்படி குறந்தது 25 போர்வெல் துளைகளை கடின பாறையில் போட்டால் தண்ணீர் தானாக வெளியே வந்து விடும் என்று கூறுகின்றனர்.
நம் நாட்டில் பெரும்பாலான தண்ணீர் பாறை இடுக்கு களிலேயே நிரம்பி உள்ளது. இதற்கு காரணம் மழை பெய்யும் போது அதனுடைய நீர் மண்ணால் ஈர்க்கப்பட்டு நிலத்திற்கு அடியில் உள்ள பாறைகளிலேயே சென்றடை கிறது.
பெரும்பாலும் ஜதராபாத் பகுதியில் ஆண்டிற்கு 750 மில்லி மீட்டர் மழை பொழிகிறது. இந்த தண்ணீர் முழுவதும் பாறை படுகையையே சென்றடைகிறது.
Thanks for Your Comments