கர்நாடக அரசு பஸ் கண்டக்டர், பயணியரை ஈர்க்க, தன் மொபைல் போன் எண்ணை தகவல் பலகையில் எழுதி வைத்துள்ளார். இதனால், பஸ் வரும் நேரம் குறித்து, எளிதாக அறிந்து கொள்ள முடியும். கர்நாடகா மாநிலம், மைசூரில் காலை, 8:00 மணிக்கு புறப்படும், அம்மாநில அரசு பஸ் மதியம், 2:00 மணிக்கு திருப்பூர் வருகிறது.
திருப்பூரில், மதியம், 2:50 மணிக்கு புறப்படும் பஸ், இரவு, 8:30 மணிக்கு மைசூரை அடைகிறது. மாநில எல்லையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இரு மாநிலங்கள் இடையே, இந்த பஸ் அவ்வப்போது நிறுத்தப் படுகிறது.
இந்த பஸ் கலெக் ஷனை அதிகரிக்க, பஸ்சின் கண்டக்டர், முனீர்கான், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் வைக்கப் பட்டுள்ள திருப்பூர் - மைசூரு பஸ் அறிவிப்பு பலகையில், தன் மொபைல் எண், 93429 87394யை எழுதி வைத்துள்ளார்.
மைசூருக்கு கர்நாடக பஸ்சில் பயணிக்க, 'பார்சல்' அனுப்ப வருவோர், தகவல் பலகையில் உள்ள, மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்கின்றனர். எதிர் முனையில் பேசும் கண்டக்டர், பஸ் எத்தனை மணிக்கு திருப்பூர் வரும், எந்தெந்த ஊருக்கு எந்த நேரத்தில் செல்லும் என்பது உட்பட முழு விபரங்களை தெரிவிக்கிறார்.
எப்போது போன் செய்தாலும், முகம் சுளிக்காமல் இவர் பதில் கூறி, இரு மாநில பயணியரை கவர்ந்திழுத்து உள்ளார். அன்று, தான் பணிக்கு வராவிட்டாலும் கூட, பணிக்கு வரும் கண்டக்டர் குறித்த விபரத்தையும் தெரிவித்து விடுகிறார். கண்டக்டர் முனீர்கானின் நடவடிக்கை, பயணிய ரால் பெரிதும் பாராட்டப் படுகிறது.
Thanks for Your Comments