லூதியானாவில் விமான வடிவில் ஓட்டல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ஹவாய் அட்டா என்று அந்த ஓட்டலுக்கு பெயர். இந்த ஓட்டல் விமானத்தில் இருப்பது போன்ற உணர்வை வாடிக்கை யாளர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப் பட்டுள்ளது. விமானத்தில் இதுவரை பயணம் செய்யாதவர் களுக்கு இந்த ஓட்டல் புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஓட்டலில் நான்கு வகையான உணவு வகைகள் பரிமாறப் படுகின்றன. இந்த ஓட்டலை வடிவமைக்க ஒன்றரை வருடங்கள் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலங்கார வேலைப்பாடுகள் அனைத்தும் விமானத்தில் இருப்பது போன்று செய்யப் பட்டுள்ளது.
இதனால் இந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கை யாளர்களின் எண்னிக்கை உயர்ந்துள்ள தாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஓட்டலில் சாப்பிட்ட அனுபவம் ஒரு விமானத்தில் பறந்த அனுபவத்தை தந்ததாக வாடிக்கை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Thanks for Your Comments