டிக்கெட் ஓப்பனிங்கு களுக்கு 15 நிமிடங்களு க்கு முன்னதாகவே ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். எங்கிருந்து உங்கள் பயணம் துவங்குகிறது என்றும் எங்கு செல்கிறீர்கள் என்றும், பயண தேதி ஆகிய வற்றையும் உள்ளீடாக கொடுங்கள்.
சப்மிட் தந்து, தட்கல் கோட்டவை க்ளிக் செய்ய வேண்டும். பின்பு, பெயர், வயது, பாலினம், சீட் ப்ரிஃபெரண்ஸ் ஆகிய வற்றை உள்ளீடாக தர வேண்டும். பின்பு திரையில் தெரியும் கேப்சா கோடை க்ளிக் செய்ய வேண்டும்.
ஜியோ மணி, ஏர்டெல் மணி, ஓலா மணி, மொபிவிக், போன்ற ஈ-வாலட்டுகள் வழியாகவும், ஏற்கனவே சேமிக்கப்பட்டு வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் வழியாகவும் பணம் கட்டலாம். ஒரு நபர் 6 வங்கிக் கணக்குகள் வரை இந்த ஐ.ஆர்.சி.டி.சி வாலட்டுகளில் இணைக்க இயலும்.
பே.டி.எம் வழியாக புக் செய்வது எப்படி ?
பே.டி.எம். லாக் இன் செய்யுங்கள் . அதில் ட்ரெய்ன் ஆப்சன் காட்டும். அதில் பயண இடம், ரயில் பெயர், எண் ஆகிய வற்றை உள்ளீடாக கொடுத்து, தட்கல் கோட்டாவை செலக்ட் செய்ய வேண்டும்.
பின்பு பயணிகளின் விபரம் அளிக்க வேண்டும். செலக்ட் ப்ரீஃபெர்ட் பெர்த் என்ற ஆப்சனை கொடுத்து பே.டி.எம் வாலட் அல்லது க்ரெடிட் டெபிட் கார்டுகள் வழியாக டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.
Thanks for Your Comments