18 எம்.எல்.ஏ. க்களின் குடும்பங்களும் எவ்வளவு வேதனையில் உள்ளது என்புது தினகரனுக்கு தெரியுமா?, டிடிவி தினகரனிடம் நான் ஏன் பெட்டி பாம்பாக அடங்க வேண்டும் என்றும் அவர் எனக்கு என்ன சோறா போடுகிறார் என தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசமாக கூறி யுள்ளார்.
சென்னை: நான் உண்மை பேசியதால் என்னை ஊடகங்கள் பெரிதுப் படுத்தின என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தங்க தமிழ்ச் செல்வன் விளக்கம் அளித்துள்ளார். தினகரனிடம் பொட்டிப் பாம்பாக நான் அடங்க அவர் எனக்கு சோறா போடுகிறார் என ஆவேசமாக அடுக்கடுக் கான கேள்விகளை எழுப்புயுள்ளார்.
அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ் செல்வன், கட்சி நிர்வாகி ஒருவரிடம் ஆட்சேபகரமான முறையில் கருத்து களைத் தெரிவித்தார். இந்த உரையாடல் சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியானது.
இந்த நிலையில், தங்க தமிழ் செல்வன் சார்ந்துள்ள தேனி மாவட்டத்தின் அமமுக நிர்வாகி களுடன் சென்னையில் டிடிவி தினகரன் நேற்று செவ்வாய் கிழமை சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தலைமைக் கழக நிர்வாகிகளை அறிவிப்போம் எனவும், நீக்கல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என்பதற்காகவும் காத்திருந்தோம். அதே நேரத்தில், யாரையும் நீக்க அச்சமோ, பயமோ கிடையாது.
ஜூலை முதல் வாரத்தில் கட்சி நிர்வாகிகளின் நியமனம் அறிவிக்கப் படும். கட்சி நிர்வாகியிடம் தொலைபேசி யில் பேசும் போது, தான் விஸ்வரூபம் எடுப்பதாக தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார். அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார். பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார்.
அவர் எனது உதவி யாளரிடம் பேச வில்லை. கட்சியின் நிர்வாகியான மதுரையைச் சேர்ந்த செல்ல பாண்டியனிடம் பேசியுள்ளார். தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அவரிடம் இனிமேல் விளக்கம் கேட்க மாட்டேன். கட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முதலாக நீக்கல் அறிவிப்பு வேண்டாம் என்பதற்காகவே காத்திருக் கிறேன்.
அந்தப் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப் பட்டாலே பழைய நபர் நீக்கப் பட்டதாகவே அர்த்தம். தங்க தமிழ் செல்வன் எப்போதும் என்னிடம் நேராக எதையும் சொல்ல மாட்டார். வாய்க்கு வந்ததைப் பேசுவார். அவரை தொடர்ந்து எச்சரித்தே வந்துள்ளேன். யாரோ அவருக்கு அறிவுறுத்தல் களை வழங்குகிறார்கள்.
அதன்படி அவர் செயல் படுகிறார். முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுக்கச் சொன்னது தங்க தமிழ் செல்வன் தான். இதை சக எம்எல்ஏ க்களிடமே கேட்டுப் பாருங்கள். என்றார் டிடிவி தினகரன். இந்நிலையில், தங்க தமிழ் செல்வன் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் உண்மை பேசியதால் என்னை ஊடகங்கள் பெரிதுப்ப டுத்தின.
ஊடகங்களை குறை கூறுவது தலைமைக்கு அழகு அல்ல. கட்சிக்கான வேலையை மட்டும் தலைமை பார்க்க வேண்டும். அதை விடுத்து என்னை பற்றி அவதூறு பரப்புகிறார் தினகரன். கூவத்தூரில் எங்களை ஒரு மாதம் அடைத்து யாரை கேட்டு அடைத்தீர்கள்? புதுச்சேரியில் எங்களை ஒரு மாதம் அடைத்தீர்கள்.
எதற்காக அடைத்தீர்கள்? தீவிரவாத அமைப்புகு தலைவர் போல் கட்சியை வழி நடத்துகிறார் தினகரன். தீவிரவாத அமைப்புதான் ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையை பயன்படுத்தும். அந்த ஸ்லீப்பர் செல் வார்த்தையை பயன்படுத்தி என்ன சாதித்தீர்கள். இன்னும் எத்தனை நாட்கள் தான் ஏமாற்ற முடியும்.
உங்களால் இரட்டை இலையை மீட்க முடிய வில்லை. 18 எம்எல்ஏ. க்களின் பதவிக்கு எந்த உத்திரவாதமும் தர முடியவில்லை. 18 எம்எல்ஏ. க்களின் குடும்பங்களும் எவ்வளவு வேதனையில் உள்ளது என்பது டிடிவிக்கு தெரியுமா?.
நான் அமைச்சர்கள் வேலுமணி, தங்க மணியிடமும் பேசி வருவதாகவும், அவர்கள் என்னை ஆட்டிப் படைப்பதாகவும் கூறுகிறார். அவர்களிடம் நான் பேசியதே இல்லை என்றார். என அடுத்தக்கட்ட நடவடிக்கை வரை பொறுமையாக இருப்பேன். பிற்காலத்தில் அரசியல் விமர்சகராக வருவேன். எனக்கு வேறு எந்த விருப்பமும் இல்லை.
என்னை யாரும் பின் இருந்து இயக்க வில்லை. வளர்ந்து வருவதால், என் மீது அவருக்கு பொறாமையாக கூட இருக்கலாம். நான் அமைதியாக இருப்பேன், என்னை குறித்து பேச ஆரம்பித்தால், நான் பல விஷயங் களை பேசுவேன். டிடிவி தினகரனிடம் நான் ஏன் பெட்டி பாம்பாக அடங்க வேண்டும்.
அப்படியொரு அவசியம் எனக்கு இல்லை என்றவர் அவர் எனக்கு என்ன சோறு போடுகிறாரா என கேள்வி எழுப்பிய தங்க தமிழ் செல்வன், தராதரம் இல்லாத பேச்சுக் களை பேசக்கூடாது என தெரிவித்தார்.
Thanks for Your Comments