சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தில் அப்ஹா என்ற நகரில் சவுதி அரசுக்கு சொந்தமான விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த விமான நிலையத்தின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் இன்று ஏவுகணை களை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி போராளிகள் தெரிவித் துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக சவுதி அரசு அதிகாரப் பூர்வமான தகவல் ஏதும் வெளியிட வில்லை.
இந்த சம்பவம் உறுதிப்படுத்தப் பட்டால் கடந்த ஒருவார காலத்தில் அப்ஹா விமான நிலையம் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதலாக இது அமையும். கடந்த புதன்கிழமை ஹவுத்தி போராளிகள் இங்கு நடத்திய தாக்குதலில் 26 பேர் காய மடைந்தனர்.
இதற்கு பழிதீர்க்கும் வகையில் எல்லைப் பகுதியில் உள்ள ஹவுத்தி போராளி களின் முகாம்களின் மீது சவுதி விமானப் படைகள் ஆவேசமாக தாக்குதல் நடத்தியது நினை விருக்கலாம்.
Thanks for Your Comments