சென்னை வியாசர்பாடி எம்.என். கார்டன் பகுதியில், பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் ரவுடிகள் வல்லரசு உள்ளிட்டோர் நின்றிருப்ப தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலரான பவுன்ராஜ், சக காவலர்களுடன் சென்று ரவுடிகளை கைது செய்ய முயற்சித் துள்ளார்.
அப்போது கூட்டாளிகளுடன் இருந்த பிரபல ரவுடி வல்லரசு, காவலர் பவுன்ராஜை பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டி யுள்ளார். இதில் காவல் ஆய்வாளர் பவுன்ராஜ் படுகாய மடைந்து சம்பவ இடத்திலேயே சாய்ந்து விழுந்தார். இதனை யடுத்து உடனடியா க காவலர்கள் எதிர் தாக்குதல் நடத்தியதில், ரவுடி வல்லரசுவை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
காவல் ஆய்வாளர் பவுன்ராஜை மீட்ட காவலர்கள், அவரை ஸ்டான்லி மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அவருக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ள தால், 20 தையல்கள் வரை அவரது உடம்பில் போடப் பட்டுள்ளன.
இதனிடையே, தற்காப்புக் காகவே ரவுடி வல்லரசுவை சுட்டுக் கொன்றதாக தாக்குதலுக் குள்ளான காவல் ஆய்வாளர் பவுன்ராஜ் விளக்க மளித்தார். நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் கன்னி யப்பனிடம் தொலை பேசியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Thanks for Your Comments