தண்ணீர் பிரச்னையால் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் அவதிக் குள்ளாகி யுள்ளனர். சென்னை குரோம் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் நாளொன்று க்கு 25 முதல் 30 அறுவை சிகிச்சைகள் செய்யப் படுகின்றன.
தற்போது தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் 15 முதல் 18 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சைகள் நடப்பதாக மருத்துவ மனையின் இயக்குனர் தெரிவித் துள்ளார். மிக அவசர தேவையாக இருப்பவர் களுக்கு மட்டும் தற்போது அறுவை சிகிச்சை நடைபெறுவதா கவும், மற்ற நோயாளி களை சிறிது காலம் கழித்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று சொல்லி வருவதாகவும் தெரிவித்தார்.
மருத்துவ மனையை பொருத்த வரையில் ஆபரேஷன் தியேட்டர் சுத்தப் படுத்துவது, மருத்துவ கருவிகளை சுத்தப் படுத்துவது, அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் சில நாட்கள் நோயாளிகள் மருத்துவ மனையிலேயே தங்கி இருக்கும் போது அவர்களது அறைக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் கொடுப்பது என ஏராளமான அளவுக்கு தண்ணீர் செலவாகிறது.
ஆனால் தனியார் லாரிகள் மூலம் வரக்கூடிய தண்ணீரும் தற்போது கிடைக்காமல் இருப்பதால் அடுத்து வரும் நாட்களில் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.
எனவே தமிழக அரசு மருத்துவ மனைகளுக்கு மட்டுமாவது போதுமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை யாக வைக்கின்றனர்.
Thanks for Your Comments