தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை !

0
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் திருந்தது. இதனை யடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை



சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான அண்ணாநகர், திருமங்கலம், போரூர், மதுரவாயல், பூந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, அசோக்நகர் ,கிண்டி, நுங்கம்பாக்கம், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர், மாதவரம், பெரம்பூர், வியாசர்பாடி, கோடம்பாக்கம், 
கே.கே. நகர் தியாகராய நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஈக்காட்டு தாங்கல், சைதாப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, சின்னமலை, வளசரவாக்கம், பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, வடபழனி , அரும்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம்

திருத்தணி, பெரியகுப்பம் , மணவாள நகர், ஈக்காடு, காக்களூர், ஆர்கே பேட்டை, திருவாலங்காடு, பள்ளிபட்டு மணவூர்உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செவிலிமேடு ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.



விழுப்புரம்

விழுப்புரம் அரகண்ட நல்லூர், திருக்கோவிலூர், முகையூர், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி, சென்னாபுரம், மும்முனி,, கீழ் கொடுங்காளுர், கொசப்பட்டு, மாம்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings