உத்தரபிரதேசம் மாநிலத்தின் அலிகார் பகுதியில் உள்ளது ‘முகேஷ் கச்சோரி’. இது மிக சாதாரண மான கச்சோரி, சமோசா ஆகியவை விற்கும் சிறிய கடை ஆகும். இதன் உரிமையாளர் முகேஷ், 12 ஆண்டு களுக்கு முன்பு இந்த கடையை தொடங்கி யுள்ளார். இந்த கடைக்கு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் வாடிக்கை யாளர்களாக உள்ளனர்.
இவரது கடையின் ஸ்பெஷலே, ஒரு முறை கச்சோரி சாப்பிட தொடங்கி விட்டால் வாடிக்கை யாளர்கள், தினமும் வந்து சாப்பிடாமல் செல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு நேர்த்தி யாகவும், ருசியாகவும் கச்சோரி, சமோசா ஆகிய வற்றை தயாரிப்பதே ஆகும்.
இவர் தனது கடையின் வருமானத்தை வங்கியில் போட்டு வைத்துள்ளார். இந்நிலையில் வணிக வரித்துறை யினர் சிலர் முகேஷின் கடைக்கு அருகே உள்ள கடையில் அமர்ந்து அவரது வியாபாரம் குறித்து டிராக் செய்ய ஆரம்பித்தனர். இதில் முகேஷ், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லாபம் பார்க்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
ஜிஎஸ்டி வந்த பின்னரும் அவரது கடையினை பதிவு செய்யாமல் இருந்துள்ளார். உடனடியாக வணிக வரித்துறை அவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது குறித்து முகேஷ் கூறுகையில், ‘எனக்கு இது பற்றி எல்லாம் தெரியாது. 12 வருடங்களாக இந்த கடையை நடத்தி வருகிறேன்.
வாழ்வதற் காக மட்டுமே இந்த கடையை ஆரம்பித்து, மக்களின் வரவேற்போடு ஓட்டிக் கொண்டிருக் கிறேன். இப்படி சில முறைகள் உள்ளன என்பது பற்றி யாரும் என்னிடம் எடுத்துரைத்தது இல்லை’ என கூறினார்.
இந்த விவகாரத்தை விசாரிக்கும் மாநில புலனாய்வு பணியகம் கூறுகையில், ‘முகேஷ் தனது கடையின் வருமானம் குறித்து ஒப்புக் கொண்டார். மேலும் அவர் கேஸ், சமையல் பொருட்கள் போன்றவற்றிற்கு எவ்வளவு செலவிடுகிறார்? என்கிற முழு விவரத்தை கொடுத்துள்ளார்’ என கூறி யுள்ளார்.
Thanks for Your Comments