தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு !

0
1.பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து தஹஜ்ஜுத் தொழுகைக்குத் தான்
தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு



2.கப்ரில் ஒளி கிடைக்கிறது

3.முகத்தில் ஒளி உண்டாகிறது

4.எல்லா நோய்களையும் நிவாரண மாக்குகிறது

5. இருதய நோயை விட்டுப் பாதுகாக்கின்றது

6. சிறிய பாவங்களெல்லாம் மன்னிக்கப் படுகின்றன

7. அமல்களில் இக்லாஸ் உண்டாகின்றது

8.எந்த கண்களும் பார்த்திராத எந்த காதுகளும் கேட்டிராத எந்த உள்ளமும் சிந்தித்திராத பெரிய நிஃமத்துக் களை அல்லாஹ் அளிப்பான்

9.பாவ காரியங்கள் செய்வதை விட்டும் தடுக்கின்றது

10. அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்கின்றது

11.இல்மில் பிரகாசம் உண்டாகிறது

12. மனதை விசாலமாக்குகின்றது

13. ஆயுளை அதிகரிக்கின்றது

14. மேலும் அத்தொழுகையை நிறைவேற்றிய வருக்கு சொர்க்கத்தில் ஒரு கண்ணாடி மாளிகை கிடைக்கும் அம்மாளிகையின் வெளியே இருந்து பார்த்தால் உள்ளே உள்ள தெல்லாம் தெரியும். உள்ளே இருந்து பார்த்தால் வெளியே உள்ளதெல்லாம் தெரியும்

15. சுவார்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் மேல் பட்டாடைகள் வெளி யாகின்றன அதன் அடியில் யாகூத் என்னும் முத்துக்களால் அலங்கரிக்கப் பட்ட குதிரை இருக்கும் அந்த குதிரையில் தஹஜ்ஜுத் தொழுபவர்கள் தாம் நாடிய இடத்திற் கெல்லாம் செல்லலாம்



16. உள்ளமும் நாவும் ஒன்று படுகிறது

117. என்னுடைய உம்மத்திற்கு சிரமமில்லை யென்றிருந்தால் இத்தொழு கையை நான் கடமையாக்கி இருப்பேன் (ஹதீஸ்)

18. (1) தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றுதல் (2) நோன்பு நோற்றல் (3) அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தல் (அதாவது தீனுடைய முன்னேற்றத்திற் காக பாடுபடுதல்) (4) அல்லாஹு தஆலா சொர்க்கத்தில் பறக்கும் குதிரையை அளிப்பான் (ஹதீஸின் கருத்து)

19. எவரொருவர் தஹஜ்ஜுத் தொழுகையை நியமமாக (தொடர்ந்து) தொழுது வருவாரோ அவர் அல்லாஹ் வுடைய (நேசராக) வலீயாக மரண மடைவார். அல்லாஹ்வுடைய நேசர்களுக்கு பயமென்பது கிடையாது. மேலும் கவலைப் படவும் மார்டார்கள் என்று அல்லாஹு தஆலா கூறுகிறான்

20.தஹஜ்ஜுத் துடைய நேரத்தில் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings