ஒரு புதிய குழப்பத்தில் சிக்கி உள்ளது திமுக.. இப்படி யெல்லாம் பஞ்சாயத்துகள் வரும் என்று தெரிந்திருந்தால் அப்படி ஒரு காரியத்தை தேவை யில்லாமல் செய்திருக்காது ! விஷயம் இதுதான்.. அபாரமாக ஜெயித்து விட்டது. ஆனால் வெற்றி கரமான தோல்வி என்பதை போல, மாநிலத்திலும் ஒன்னும் செய்ய முடிய வில்லை, மத்தியிலும் ஒன்னும் செய்ய வில்லை. ஆனாலும் அடுத்தடுத்த வேலைகளில் தாறுமாறாக இறங்கி உள்ளது.
இன்னும் சொல்லப் போனால், தமிழக அரசியலில் ரொம்பவும் சுறுசுறுப்பாக இருப்பது திமுக தான். ரிசல்ட் வந்த உடனேயே பீச்சுக்கு போய் கருணாநிதி க்கு மரியாதை, வாக்காளர் களுக்கு நன்றி அறிவிப்பு, எம்பிக்கள் கூட்டம், நாடாளுமன்ற தலைவர் தேர்வு, இதற்கு நடுவில் விஜயவாடா டிரிப் என டக் டக்கென ஒவ்வொன்றை யும் செய்து வருகிறது.
தீர்மானம்
ஆனால் குழப்பம் என்ன வென்றால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கையில் எடுக்குமா, எடுக்காதா என்பது தான். சபாநாயகர் என்பவர் எந்த கட்சிக்கும் சார்பில்லாமல் பொதுவானவர். ஆனால், தமிழகத் தில் ஆட்சி களுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் அவ்வப்போது கொண்டு வரப்படும் என்பது நடந்துள்ள சமாச்சாரம்தான் என்றாலும், ஒரு சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது ரொம்பவும் அரிதான விஷயம்.
சபாநாயகர்
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே திமுக இப்படி ஒரு மனுவை கொடுத்ததால், அரசியல் களம் பரபரப்பானது. ஆனால் இப்போது திமுக தரப்பு என்ன செய்ய போகிறது? நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் இதில் சபாநாயகர் மட்டுமே அடக்கம்.
ஒரு தனி நபரை குறி வைப்பது, தனி நபரின் செயல்பாடு தனக்கு பிடிக்க வில்லை என்ற நிலைப் பாட்டை சொல்வது. அவ்வளவு தான்.. அப்படியே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அதில் அதிமுக ஜெயிக்குமா என்பது கேள்விக் குறியே! அதனால் இதில் திமுக பெரிய அளவில் ஒன்றும் சாதித்து விட முடியாது.
வெயிட் அண்ட் சீ
அதே சமயத்தில் ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கையை மேற்கொள்வதானால் அந்த முயற்சி திமுகவு -க்கு இம்மியும் வீணாகாது. எனினும் ஆட்சியை கவிழ்க்க சில அதிமுக எம்எல்ஏக்களை திமுக இழுப்பதாகவும், இதே ஆட்சியை தக்க வைத்து கொள்ள, அதிமுக தரப்பில் இருந்து திமுக எம்எல்ஏ -க்களை இழுப்பதா கவும் செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன.
இதனிடையே ஸ்டாலின் சும்மா இல்லாமல், "வெயிட் அண்ட் சீ" என்று ஒரு பஞ்ச் வைத்து விட்டு போகவும் பொது மக்களும் திமுக என்ன செய்ய போகிறது என்பதை ஆர்வமுடன் கவனித்து வருகிறார்கள்.
புது குழப்பம்
எனவே திமுகவுக்கு வந்துள்ள குழப்பம், சபாநாயகரா, முதலமைச்சரா என்பது தான். சபாநாயகர் மீது அப்படி காழ்ப்புணர்ச்சி இருப்பதாக தெரிய வில்லை. சமீபத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ -க்களுக்கு சபாநாயகர் தான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது ஸ்டாலினும், சபாநாயகரும் ஒருவருக் கொருவர் காட்டிக் கொண்ட நெருக்கம் கவனிக்கத் தக்கதாகவே இருந்தது. அவர்களின் சிரிப்பும், மகிழ்ச்சியும் விரோத எண்ணத்தையும் வெளிப் படுத்துவதாக இல்லை. அதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதை அநேகமாக திமுக கை விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
ஆதரவு கிடைக்குமா?
ஆனால் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திமுக கை விட்டால் அது கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தும். காரணம், எந்தக் காரியத்திலும் திமுக உறுதியுடன் செயல்பட மாட்டேங்குதே என்ற தோற்றம் வந்து விடும். எனவே அதையும் பார்க்க வேண்டி யுள்ளது.
இருப்பினும் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கலாம் என்பதால் அந்த முடிவுக்கு திமுக முன்னுரிமை கொடுக்கும் வாய்ப்பும் உள்ளதை மறுக்க முடியாது.
Thanks for Your Comments