மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 74.92% மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் முதல் 50 இடங்களு க்குள் தமிழக மாணவ, மாணவிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை.
இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ (17) மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த வைஷியா (17) மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு குப்பத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா (வயது 18).
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், இன்று தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மோனிஷா கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். இரண்டாவது முறையும் தோல்வி அடைந்ததால், மனவேதனை யில் தற்கொலை செய்துள்ளார்.
தேர்வு முடிவு வெளியான 2 நாட்களில் 3 மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Thanks for Your Comments