திருப்பூர் மாவட்டம் போயம் பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ் குமார். இவர் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் செல்போன் மற்றும் சில மின்னணு கருவிகளை கொண்டு புதிய முறையில் லாக்கர் ஒன்றை உருவாக்கி யுள்ளார்.
இதில் பீரோவை யார் திறந்தாலும் உரிமை யாளரின் போனுக்கு அழைப்பு வருவது போல லாக்கரை வடிவமைத் துள்ளார். இந்த அசத்தலான கண்டுபிடிப்பு குறித்து ஹரீஷ் குமார் கூறியதாவது:
பீரோவின் லாக்கர் ஓப்பன் செய்ய சாவி துவாரத்தில் சர்க்கியூட் ஒன்றை தயாரித் துள்ளேன். உட்புறம் ஒரு செல்போனும் இதனுடன் பொருத்தப் பட்டுள்ளது. இவை அனைத்தும் மெல்லிய சர்க்கியூட் மூலம் பாதுகாப்பாக இணைக்கப் பட்டுள்ளது.
யாரேனும் பீரோவினை திறக்க முற்பட்டால் அதனுடன் இணைக்கப் பட்டுள்ள செல்போன் மூலம் உரிமை யாளருக்கு உடனடியாக அழைப்பு சென்று விடும். இதற்கு ரூ.2000 மட்டுமே ஆனது. என்னிடம் இருந்த பழைய செல்போன் மூலம் இதனை செய்தேன்.
கண்டு பிடிப்புகளில் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. வெளியூர் களுக்கு செல்லும் போது பாதுகாப்பு தேவைப்படும் என்பதற்காக ஓய்வாக இருக்கும் போது இந்த டிஜிட்டல் லாக்கரை செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments