உடல்நல பிரச்சனைக்கு எலுமிச்சை, மிளகு மற்றும் உப்பு !

0
உடல்நல பிரச்சனை களுக்கு தீர்வளிக்க எலுமிச்சை, மிளகு மற்றும் உப்பை இப்படி பயன்படுத் தினாலே போதும்.
தொண்டை புண்



தொண்டை புண்

தொண்டைபுண் அல்லது தொண்டை கரகரப்பு இருக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மூக்கடைப்பு

வெது வெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதால், உடலினுள் வெப்பம் தூண்டப்பட்டு, சுவாசக் குழாய்களில் உள்ள அழற்சிகள் நீக்கப்பட்டு, மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

எடை குறையும்

தினமும் காலையில் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்பு க்களை கரைக்கும் செயல் வேகப் படுத்தப்பட்டு, உடல் எடையும் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.

பல் வலி
பல் வலி



பல் வலியால் கஷ்டப்படுபவர்கள், இந்த கலவையால் தினமும் வாயைக் கொப்பளித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை கிருமிகளை அழித்து, பல் வலியில் இருந்து நிவாரணம் தரும்.

பித்த கற்கள்
பித்தக்கற்கள் இருப்பவர்கள், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை யுடன், சிறிது ஆலிவ் ஆயில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், பித்த கற்கள் கரையும்.

காய்ச்சல்

காய்ச்சல் இருக்கும் போது, சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை யுடன், தேன் சேர்த்து கலந்து குடித்து வர, உடலைத் தாக்கிய வைரஸ் மற்றும் பாக்டீரியா க்களை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரித்து, காய்ச்சலில் இருந்து விரைவில் குணமாகலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings