தமிழகத்தில் பெண்ணொருவர் டிக்-டாக் செயலி மூலம் விஷம் அருந்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா (வயது 24) என்பரே இச்சம்பவத்திற்கு பலியாகி யுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர்.
தனது குடும்பத்தை பொறுப்புடன் நடத்தி வந்த அனித்தா, செல்போனில் டிக் டாக் ஆப்பினை பதிவிறக்கம் செய்து அதற்கு அடிமையாகி உள்ளார்.
இதன்போது குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது,
மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது போன்றவை களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்துள்ளார் அனிதா.
இதனை தொடர்ந்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் அனிதாவின் செயல்பாடு குறித்து புகார் தெரிவித்தனர்.
அவரும் அனிதாவை போனில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார்.
அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அனிதா இருந்துள்ளார். தகவல் அறிந்து ஆத்திர மடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத் துள்ளார்.
அதனை தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலியில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த அவர், பின்னர் தண்ணீரை குடிப்பது போன்ற வீடியோவை வெளி யிட்டுள்ளார்.
இறுதியாக ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை ஏற்பட்டு மயக்கம் அடைந்த துள்ளார். இதனை கண்ட அவரை அக்கம் பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக் காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக் கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
மேலும் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்கள்.
Thanks for Your Comments