விராட் ஜெர்ஸி விற்பனை அதிகரிப்பு... மாஸ் காட்டும் இளைஞர்கள் !

0
அண்மையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான், லண்டனில் நடந்த விழா ஒன்றில் பேசினார். பேச்சின் போது, இந்திய கேப்டன் விராட் கோலியை வெகுவாகப் புகழ்ந்தார். 
விராட் ஜெர்ஸி விற்பனை அதிகரிப்பு... மாஸ் காட்டும் இளைஞர்கள் !
விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்ல ஃபிட்னெஸிலும் சூப்பர். பாகிஸ்தானில் அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 

பலருக்கு விராட் கோலி கனவு நாயகன் என்று இந்திய கேப்டனுக்கு மொயின்கான் புகழாரம் சூட்டினார். 

அது மட்டுமல்ல, பாகிஸ்தானில் பலரும் `விராட் 18 'என்ற பெயர் பொறிக்கப் பட்ட ஜெர்ஸியை விரும்பி அணிகின்றனர். 
ஜெர்ஸியின் நிறம் மட்டும் பச்சை வண்ணத்தில் இருக்கிறது. சமீபத்தில் லாகூரில் இந்த ஜெர்ஸியை அணிந்து இளைஞர் ஒருவர் பைக் ஓட்டிச் செல்ல அந்தப் புகைப்படம் வைரலானது. 

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி பந்தாடிய பிறகு விராட் கோலிக்கு பாகிஸ்தானில் இன்னும் மவுசு அதிகரித்துள்ளது. 

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு முறை கூட இந்திய அணியை வென்றதில்லை. 

இந்த முறை சர்பராஸ் கான் தலைமை யிலான பாகிஸ்தான் அணியால் இந்திய அணியை வெற்றி கொள்ள முடியுமா என்று தெரிய வில்லை. 

ஆனால், இந்திய அணியை பாகிஸ்தான் அணி எதிர் கொள்ளும் போது மட்டும் கோலியின் டை-ஹார்ட் ரசிகர்கள் யாருக்கு சப்போர்ட் செய்வது என்று குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

பாகிஸ்தானில் உமர் ட்ராஸ் என்பவர் விராட்டின் பரம விசிறி. இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி மோதினாலும் தாய்நாட்டுக்கு சப்போர்ட் செய்வ தில்லை. 

ஒரு முறை தன் வீட்டில் இந்திய தேசியக் கொடியை உமர் ட்ராஸ் பறக்கவிட, பாகிஸ்தான் போலீஸார் அவரை கொத்திக் கொண்டு போனார்கள். 
வீட்டில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடிகள், விராட் புகைப் படங்களையும் பறிமுதல் செய்தனர். 

தேசத் துரோக வழக்கு அவர் மீது தொடரப் பட்டது. இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க வாய்ப்பிருந்தது. 

பின்னர், நீதிமன்றம் அவரை எச்சரித்து விடுவித்தது. உலகக் கோப்பையில் இந்திய அணி வரும் 16-ம் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings