கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் தவித்த போலீஸார், வாக்களித்த மையை வைத்து அடையாளம் கண்டுள்ளனர். மும்பை காட்கோபர் பகுதியில் மே முதல் வாரம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட உடலில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
இது கொலையா அல்லது விபத்தா என விசாரித்து வந்த நிலையில், உடற்கூறு ஆய்வில் இறந்தவர் முகம் கல்லால் அடித்துச் சிதைக்கப் பட்டிருந்ததாக கூறப்பட போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தீவிரப் படுத்தினர். சில நாள்களில் சந்தேகத்தின் பேரில் அந்த ஏரியாவைச் சேர்ந்த சபியுல்லா குரேஷி மற்றும் நியாஸ் சவுத்ரி என்ற இரண்டு பேர் கைது செய்யப் பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். போதை மருந்துக்கு அடிமையான இருவரும் பணத்துக்காக தெரு வழியாக நடந்து வந்த அந்த நபரைக் கல்லால் அடித்துக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், இங்குதான் சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. கொலை செய்ததை ஒப்புக் கொண்ட இருவரும் இறந்த நபர் யார் என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால் இறந்தவர் யார் என்று தெரியாமல் போலீஸார் குழம்பி வந்தனர்.
முகம் சிதைக்கப்பட்ட நிலையில், அவர் உடம்பில் ஒரு சிலுவை மற்றும் B, K ஆகிய எழுத்துகளும் டாட்டூகளாக இருந்தன. கூடவே கையில் வாக்களித்தற் கான மை விரலில் இருந்துள்ளது. இதைத் தவிர வேறு எந்த க்ளூவும் போலீஸாருக்கு கிடைக்க வில்லை. லோக்கல் டிவி, போஸ்டர் மூலம் விளம்பரப் படுத்தியும் இறந்தவர் தொடர்பாக யாரும் போலீஸாரை தொடர்பு கொள்ளவில்லை.
இதன் பின் நடந்த சம்பவத்தை விவரிக்கும் தியோதர் போலீஸ் அதிகாரி பாபர், ``நாங்கள் முதலில் வாக்களித்த மையைப் பெரிய க்ளூவாக எடுத்துக் கொள்ள வில்லை. எங்கள் பகுதியில் ஒருநாள் நடந்து செல்லும் போது தான் இங்குள்ளவர்கள் கையிலும் வாக்களித்த மை இருந்ததைப் பார்க்க முடிந்தது. உடனே ஏன் இவர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது என்கிற ரீதியில் விசாரணை செய்ய ஆரம்பித்தோம். முதலில் இந்தப் பகுதியில் வாக்காளர் பட்டியலை சேகரித்தோம்.
3.5 லட்சம் கொண்ட வாக்காளர் பட்டியலில் பெண்களை நீக்கிவிட்டு ஆண்கள் பட்டியலில் இவருக்கான அடையாளங்கள் மற்றும் B, K எழுத்துகளில் உள்ளவர்களை மட்டும் தேடினோம். 12 போலீஸார் இணைந்து இந்த வேலையைச் செய்தோம். சில சிரமங்களு க்குப் பிறகு 125 பேரை இறுதியாக அடையாளம் கண்டு அவர்களில் ஒருவர் தான் இறந்த நபர் என முடிவு செய்து இவர்கள் வீடுகளில் விசாரித்தோம்.
அப்படித் தேடும்போதுதான் இறந்தவர் மன்கஹர்ட் பகுதியைச் சேர்ந்த கிரண் வான்கடே என்பது தெரிய வந்தது. அவருக்குத் தாய் மட்டும்தான் இருக்கிறார். நாங்கள் அவரது உடம்பில் டாட்டூ புகைப்படத்தைக் காண்பிக்கும் போதே அவரின் தாயார் அழத் தொடங்கி விட்டார். அவர் உடம்பில் டாட்டூவும், மையும்தான் எங்களுக்கு முக்கிய ஆதாரங்களாக இருந்தன.
தனது காதலி நினைவாக அவர் உடம்பில் டாட்டூ வரைந்துள்ளார்" என்றனர். கொலை செய்யப் பட்டவர் ஒரு மாதம் கழித்து அடையாளம் காணப் பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது... விகடன்
Thanks for Your Comments