தண்ணீர் பிரச்னையை சமாளிக்கும் வழி என்ன?

நீரின் அளவு குறைந்து விட்டது… இனி என்ன செய்ய வேண்டும்... உடல் ரீதியாக நாம் எப்படி தயாராக இருக்க வேண்டும்? 
தண்ணீர் பிரச்னையை சமாளிக்கும் வழி
பிஸியோதெரபிஸ்ட் & எர்கோனாமிஸ்ட் மருத்துவர் ஹரிஷ்குமார் சில ஆலோசனை களை வழங்குகிறார். “நம்ம உடல் 50 முதல் 60% நீராலானது. 

3 முதல் 5 நாட்கள் வரை நீர் மட்டுமே அருந்தி ஒரு மனுஷன் உயிர் வாழ முடியும். அப்படிப்பட்ட நீர் கிடைக்கறது இப்ப கஷ்டமா இருக்கு. 

ஸோ, மாற்று ஏற்பாடா தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, இளநீர், வெள்ளரி, மோர் இதெல்லாம் எடுத்துக்க லாம்.
நீரைவிட அதிகமான நீர்ச்சத்து இந்த பழங்கள்ல இருக்கு. முடிஞ்சவரை மசாலா, சிக்கன், மட்டன், எண்ணெயில் பொரிச்ச உணவுகளைத் தவிர்க்கலாம். 

மைதா, கிழங்கு வகைகளை அதிகமா சேர்த்துக்கக் கூடாது. மீன் தாராளமா சாப்பிடலாம். கோடை காலத்துல நம்ம சதைகள் அதிகமா பிடிச்சுக்கும். 

அதனால இரவு படுக்கறதுக்கு முன்னாடி எண்ணெய் தேய்ச்சு நீவி விட்டுட்டு படுக்கலாம். வெயில்ல கொஞ்சமாவது தலைப் பகுதியை மறைப்பது நல்லது. 
அதிகாலைல உடற்பயிற்சி செய்தா குளிர்ந்த காற்று, ஆக்ஸிஜன் அதிகமா கிடைக்கும். முடிஞ்ச வரை கடை உணவு களைத் தவிர்த்துடுங்க’ என்கிறார் ஹரிஷ்குமார்.
Tags:
Privacy and cookie settings