ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார். இதில் முதல் கோப்பாக சுகாதாரத் துறையில் பணிப்புரியும் ஆஷா பணியாளர் களின் ஊதியத்தினை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தினார்.
விவசாயி களுக்காக 'ரையத் பரோசா' எனும் திட்டத்தை அறிமுகப் படுத்தி, அதன் மூலம் ஆண்டிற்கு ரூ.12,500 சலுகை பெறுவார்கள் என அறிவித்தார். இதனை யடுத்து 5 துணை முதல்வர்களை நாட்டிலேயே முதன் முறையாக நியமித்தார். 25 கேபினட் அமைச்சர்களையும் நியமனம் செய்தார்.
அடுத்த அதிரடியாக, வரும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வரும் என அறிவித்தார். மேலும் ஆந்திராவில் 15 நாட்களுக்கு மண் அள்ள தடை விதித்தார். ஏனென்றால், ஆந்திராவில் மண் அள்ளுவது தொடர்பாக புதிய கொள்கை ஒன்றை கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ஆந்திர காவல் துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை வழங்கப்படும் என உத்தர விட்டுள்ளார். இது குறித்த அறிக்கையில், ‘புதிய அறிவிப்பின்படி ஆந்திர காவல் துறையைச் சேர்ந்த தலைமை காவலர்கள், துணை காவலர்கள், கான்ஸ்டெபில்கள், காவலர்கள் என அனைவருக்கும் வார விடுமுறை அளிக்கப்படும்.
இதன் மூலம் 67,804 பேர் பயன்பெற முடியும். இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைப் படுத்தப்படும்’ என குறிப்பிடப் பட்டுள்ளது.
Thanks for Your Comments