சிலருக்கு கால் வீங்குவது எதனால்?

அறுவை சிகிச்சைக்கு பின், சிலருக்கு கால் வீங்கி விடும். தொடர்ந்து படுக்கையில் படுத்தபடியே இருப்பவர்களுக்கும் இப்படி பிரச்னை ஏற்படும். 
சிலருக்கு கால் வீங்குவது எதனால்?
இதற்கு பெயர், டீப் வெய்ன் த்ரோம்போசிஸ். கால் நரம்புகளில் ஓடும் ரத்தம் ஒரே இடத்தில் கட்டி விடுவதால் ஏற்படும் கோளாறு தான் இது.

காலில் இப்படி ரத்தம் கட்டி விடுவதால், மற்ற விரல் பகுதிகளிலும் ஒரு வித இறுக்கம் காணப்படும். ரத்தம் செல்லாததால் அந்த பகுதிகளும் வீக்கம் காணும்.
இதற்கு, டாக்டர்கள் வலி நிவாரணி மாத்திரையையும், ரத்தம் கட்டாமல் இருப்பதற் கான மருந்தும் தருவர். காலுக்கு பொருந்தாத காலுறை அணிவதால் கூட இப்படி வீக்கம் ஏற்படும்.

அடிக்கடி இப்படி நேர்ந்தால், ரத்த நாளம் சம்பந்தப்பட்ட டாக்டரிடம் காட்டி சிகிச்சை செய்வது நல்லது.
Tags:
Privacy and cookie settings