உலகக்கோப்பையில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள்?

0
உலக கோப்பை போட்டியில் நேற்றுடன் 25 ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 20 ஆட்டங்கள் எஞ்சி யுள்ளன. ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தற்போதுள்ள புள்ளி விவரப்படி தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டன. 
உலகக்கோப்பையில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள்?



முதல் 4 இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு நுழைவதற் கான வாய்ப்பு அதிகமாக உள்ளன. அதே நேரத்தில் 4-வது அணியாக தகுதி பெறும் போட்டியில் வங்காளதேசம், பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் உள்ளன.
ஒவ்வொரு அணிகள் பற்றிய கண்ணோட்டம் வருமாறு:-

நியூசிலாந்து: 

9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தோல்வியை சந்திக்காத அணி. வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் மோத வேண்டி உள்ளது. இந்த ஆட்டங்கள் சவாலானது.

இங்கிலாந்து: 

வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இங்கிலாந்து அணி பாகிஸ்தானிடம் மற்றும் தோற்றுள்ளது. 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இன்னும் 4 ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. முதல் 2 இடங்களை பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா: 

4 ஆட்டத்தில் வெற்றி பெற்ற அந்த அணி இந்தியாவிடம் தோற்று இருந்தது. இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா வுடன் மோத வேண்டியுள்ளது. அரை இறுதியில் நுழைவதற் கான வாய்ப்பில் நெருங்கி விட்டது.

இந்தியா: 

தான் மோதிய 3 ஆட்டங்க ளிலும் வெற்றி பெற்றது. நியூசிலாந்துடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்தானது. ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை அணிகளுடன் மோத வேண்டி யுள்ளது. இங்கிலாந்தை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.
வங்காளதேசம்: 



5 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசை அதிர்ச்சிகர மாக வீழ்த்தி இருந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுடன் மோதும் ஆட்டம் சவாலானது. இந்த ஆட்டங்களின் வெற்றியை பொறுத்து அந்த அணி அரை இறுதியில் நுழையும் நிலையில் உள்ளது.

இலங்கை: 

5 ஆட்டத்தில் விளையாடி 4 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணிக்கு இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் பெற்றது. நிகர ரன்ரேட்டில் பின் தங்கி இருப்பதால் முன்னேற்றம் காண்பது சவாலானது.

வெஸ்ட்  இண்டீஸ்: 

தொடக்கம் அபாரமாக இருந்தது. போக போக மோசமான ஆட்டத்தை அந்த அணி வெளிப் படுத்தியது. இந்தியா, நியூசிலாந்து அணிகளை கண்டிப்பாக வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா: 

6 ஆட்டத்தில் 4 தோல்வியை தழுவியதால் அந்த அணி கிட்டத்தட்ட வெளியேற்றப் படும் நிலையில் இருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்கள் அந்த அணிக்கு சம்பிரதாய மாக இருக்கும். இந்த ஆட்டங்களில் வெற்றி பெற்று அந்த அணி கவுரவமான இடத்தை பிடிக்க முயற்சிக்கும்.
பாகிஸ்தான்: 

5 போட்டியில் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 4 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. வெற்றி பெற்றாலும் அந்த அணியின் ரன்ரேட் மோசமான நிலையில் இருக்கிறது.



ஆப்கானிஸ்தான்: 

புள்ளிகள் எதுவும் பெறாமல் தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்றது. தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. ஒரு ஆட்டத் திலாவது வெல்ல வேண்டும் என்பது அந்த அணியின் இலக்காக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings