வட கொரிய அதிபர் கிம் ஜாங் தனது ராணுவ தளபதியை மீன்களுக்கு இரையாக்கி மரண தண்டனையை நிறைவேற்றி யுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதிரடி மற்றும் சர்ச்சைக்குப் பெயர் போனவர். கடந்த இரண்டு வருடங்களாக இவர் நடத்திய அணு ஆயுத சோதனையைக் கண்டு மொத்த உலக நாடுகளும் அதிர்ந்து போயின.
அதை நிறுத்த வேண்டும் எனப் பல வல்லரசு நாடுகள் கூறியும் அதைச் சற்றும் காதில் வாங்காமல் தன் வேலையைச் செய்து முடித்தார். தொடர் அணு ஆயுத சோதனைகளால் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, தான் சோதனையைக் கை விட்டதாகவும் இனி அணு ஆயுத சோதனை நடத்த மாட்டேன் எனவும் அறிக்கை வெளியிட்டார். பின்னர்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் சந்திக்கும் வரலாற்றுச் சம்பவம் நடைபெற்றது.
இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான உறவு நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாம் தலைநகர் ஹானோவில் நடந்த உச்சி மாநாட்டில் மீண்டும் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். அந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
ஒப்பந்தம் தோல்வியில் முடிந்ததில் கடுப்பான கிம் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த கிம் ஹியோக் சோல் என்னும் சிறப்புத் தூதரை கொன்றுள்ளார் என தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தின. இவர் மட்டுமல்லாது பெயர் தெரியாத இன்னும் நான்கு பேரும் கொல்லப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடப் பட்டது. வட கொரிய அதிபருக்குத் துரோகம் செய்ததால் அவர்கள் கொலை செய்யப் பட்டார்கள்
எனக் கூறப்பட்டது. இருந்தாலும் இது தொடர்பாக தென் கொரிய அரசு எந்த விளக்கமும் அளிக்க வில்லை. இதைத் தொடர்ந்து கிம் ஜாங் உன் தற்போது தன் ராணுவத் தளபதியைக் கொலை செய்துள்ள தாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. தனக்கு எதிராக ராணுவப் புரட்சி செய்ய முயன்ற தன் ராணுவத் தளபதியைக் கொன்று மீன்களுக்கு இரையாக்கி யுள்ளார் என்று இங்கிலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் படத்தால் ஈர்க்கப்பட்ட கிம், தான் வடகொரிய அதிபராகப் பதவியேற்ற பின்பு படத்தில் வருவதைப் போல் தன் மாளிகைக்குள் ஒரு பிரமாண்ட தண்ணீர் தொட்டியை கட்டி, பிரேஸிலில் இருந்து வரவழைக்கப்பட்ட நூற்றுக் கணக்கான பிரானா மீன்களை அதில் வளர்த்து வந்துள்ளார். இந்த மீன்கள் தன் இரையைக் கடித்தே தின்று விடும் தன்மை கொண்டவை. தனக்கு எதிராகச் செயல்படுபவர் களுக்கு மரண தண்டனை விதிக்கவே அவர் பிரானா மீன்களை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
உயிருடன் உள்ள புலிகள், சிறைக் கைதிகள் போன்ற வற்றைத் தொட்டியின் மேற் பகுதியில் உயிருடன் கட்டி விட்டால் மீன்கள் அவற்றை இரையாக்கிக் கொள்ளுமாம். கிம், பதவியேற்ற 2011-ம் ஆண்டு முதல் இதுவரை நூற்றுக்கணக் கான வட கொரிய பொது மக்கள், அவருக்குக் கீழ் பணிபுரியும் 16 உயர் அதிகாரிகள் ஆகியவர் களைக் கொன்றுள்ளார். தற்போது தன் ராணுவ தளபதியையும் கொன்றுள்ளார்.
``வடகொரியாவில் தனக்கு எதிராக நிறைய கிளர்ச்சி யாளர்கள் உள்ளனர். அவர்களுக்குப் பயந்தபடியே கிம் ஆட்சி நடத்தி வருகிறார். `கிளர்ச்சி யாளர்களுக்கும் தன் நம்பிக்கைக் குரியவர்களு க்கும் பயத்தைக் காட்டவே அவர் இவ்வாறு தொடர் கொலைகள் செய்து வருவதாக’ இங்கிலாந்து உளவுத்துறை தெரிவிப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Thanks for Your Comments