தண்ணீர் பிரச்சினையால் பள்ளிக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை

0
தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள தால் பொது மக்கள் அவதிக் குள்ளாகி உள்ளனர். 
பள்ளிக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை



தண்ணீர் தட்டுப் பாட்டை சீர் செய்ய முதலமைச்சர் பழனிசாமி தலைமை யில் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. கடுமையான வெயில் காரணமாக பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் வற்றிப்போய் மிகவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொது மக்கள் தினமும் அவர்களது அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 
பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இந்த தண்ணீர் பிரச்சினை பள்ளிகளிலும் எதிரொலித்து உள்ளது. சில பள்ளிகளில் தண்ணீர் சரியாக வராததால், வீட்டில் இருந்தே தண்ணீர் கொண்டு வர வேண்டும் என மாணவர்க ளிடம் அறிவுறுத் தப்பட்டு உள்ளன. 

அதே போல சில தனியார் பள்ளிகளில் போதிய தண்ணீர் இல்லாததால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளன. இது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 



அதாவது தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளு க்கு விடுமுறை அளிக்கக் கூடாது. அதற்க்கான மாற்று ஏற்ப்பாடு செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கும். எனவே தண்ணீர் பிரச்சினையால் பள்ளிகளு க்கு விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பள்ளிகள் சரியாக இயங்குகிறதா? இல்லையா? என்பதை மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings