ரயில் பயண டிக்கெட்டுக் களை irctc.co.in இணையதளம் மூலமாக எங்கு இருந்து வேண்டு மானாலும் முன் பதிவு செய்யலாம். இந்நிலையில், இணையதள வங்கி சேவை, வாலெட், கார்டு பரிவர்த்தனை களுக்கு ஐஆர்சிடிசி வாடிக்கை யாளர்கள் கேட்வே கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
உதாரணத்திற்குப் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா கார்டுகள் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது கூடுதலாக 10 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது.
மேலும் ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது எஸ்பிஐ வங்கிம் கட்டணம் வசூலிக்கிறது . நெட் பேங்கிங்: எஸ்பிஐ வாடிக்கை யாளர்கள் நெட் பேங்கிங் மூலம் டிக்கெட் புக் செய்தால் அதற்கு ரூ. 10 கட்டணம். வாலெட்: எஸ்பிஐ படி(buddy) மூலம் பணம் செலுத்தினால் ரூ. 10 கட்டணம்.
டெபிட் கார்டு: ஏற்கனவே பதிவு செய்யப் பட்டிருக்கும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ. 15 கட்டணம். கிரெடிட் கார்டு: கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால் ரூ. 20 கட்டணம் வசூலிக்க படுகிறது. இது ஒவ்வொரு வங்கிக்கு ஏற்ப மாறுபடும். இதற்கான தகவல்களை வரும் நாட்களில் தெரிந்துக் கொள்ளலாம்.
Thanks for Your Comments