12 வயது சிறுவன் ஸ்மார்ட் கார்டில் குடும்ப தலைவர் !

0
தமிழகத்தில், போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க, அனைத்து கார்டுகளும், ‘ஸ்மார்ட் கார்டு’களாக மாற்றப்பட்டு வருகின்றன. பொது மக்கள், தாங்கள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளில், ஆதார் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப் பட்டு உள்ளனர்.
12 வயது சிறுவன் குடும்ப தலைவர்



பெரும் பாலான ரேஷன் கடை ஊழியர் களுக்கு முறையான பயிற்சி இல்லாததால், ஆதார் பதிவில் குளறுபடி ஏற்பட்டது. நாகை மாவட்டத்தில், 4 லட்சத்து, 33 ஆயிரத்து, 562 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. மார்ச் மாத நிலவரப்படி, 2. லட்சம் கார்டுகளில், ஆதார் பதிவு செய்யப் பட்டுள்ளது. 

1 லட்சம் கார்டுகளில், பகுதியாக, ஆதார் பதிவாகி உள்ளது. 1,325 கார்டுகளில், ஆதார் பதிவு செய்யப்பட வில்லை. முழுமை யாக பதிவு செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரர் களில், முதற்கட்டமாக, 1.லட்சம் கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகளாக அச்சிட்டு, வழங்கும் பணி நடந்து வருகிறது. இதில், கருவேலங் கடையைச் சேர்ந்த ஒரு ரேஷன் கார்டில், குடும்ப தலைவியாக, வேல்விழி என்பவர் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தது.
ஆனால், இவரது பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக, வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், குடும்பத் தலைவராக, 2005ல் பிறந்த, 12 வயது மகன் பிரவீன்ராஜ் பெயர் அச்சிடப்பட்டு, வழங்கப் பட்டுள்ளது. இதனால், வேல்விழி குடும்பத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings