துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்ட மிட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை பிடித்து விமானத்தில் ஏற்றி, இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு அனுப்பி வைத்தது. இவர்கள் அனைவரையும் டெல்லியில் கைது செய்த என்ஐஏ, பூந்தமல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தியது.
இந்த 14 பேரையும் ஜுலை 25 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது. துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை துபாய் போலீசார் கடந்த வாரம் பிடித்தனர். இதை யடுத்து இந்தியாவு க்கு அந்நாட்டு அரசு கடந்த வாரம் தனி விமானம் மூலம் அனுப்பி வைத்தது.
துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த 14 பேரையும் தேசிய புலனாய்வு அமைப்பு போலீசார் (என்ஐஏ) கைது செய்தனர். தீவிரவாத இயக்கங் களுடன் தொடர்பு உள்ளதாக கைது செய்யப்பட்ட 14 பேரும் தனி விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் இன்று சென்னை கொண்டு வரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை பூவிருந்த வல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அவர்களை ஜுலை 25 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டது. இதை யடுத்து அனைவரும் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.
இந்த 14 பேர் கொடுத்த தகவலின் பேரில் தான், நாகப்பட்டினத்தில் உள்ள அசன் அலி, ஆரிஸ் முகமது உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரும் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சிறையில் அடைக்கப் பட்டனர்.
இவர்களையும் ஜூலை 25 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 'அன்சருல்லா' என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர் புடையதாக டெல்லியில் இந்த 14 பேரும் கைது செய்யப் பட்டனர் என்றும் வெளிநாட்டில் இருந்து நிதிதிரட்டி இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
14 தமிழர்களின் பெயர் மற்றும ஊர் விவரம் பின்வருமாறு:
1. முஹம்மது ஷேக் மொஹ்தீன் - மதுரை
2. அமமது அசாருதீன் - திருவாரூர்
3. தொஹ்பீக் அஹம்மது - சென்னை
4. முஹம்மது அக்சர் - தேனி
5. மொய்தீன் சீனி ஷாகுல் ஹமிது - கீழக்கரை
6. முஹம்மது இப்ராஹிம் - நாகப்பட்டிணம்
7. மீரான் கனி - தேனி
8. குலாம் நபி ஆசாத் - பெரம்பலூர்
9 . ரஃபி அஹம்மது - ராம் நாடு
10. முன்தாப்சீர் - ராம் நாடு
11. உமர் பாஃரூக் - தஞ்சை
12. பாஃரூக் - வழிநோக்கம்.
13. பைசல் ஷெரிஃப் - ராம் நாடு
14. முஹம்மது இப்ராஹிம் - திருநெல்வேலி - ஒன்இந்தியா
Thanks for Your Comments