கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பம் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், பெங்களூரு வில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது என போலீஸ் கமிஷன்ர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் ஜூலை 25 மாலை 6 மணி வரை 144 தடை அமலில் இருக்கும். தடை உத்தரவை முன்னிட்டு, அனைத்து மதுபானக் கடைகளும், பார்களும் மூட உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது.
சட்டத்தை மீறுபவர்கள் மீது த்குந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments