காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இருவர் தகுதி நீக்கம் - சபாநாயகர் !

0
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி யடைந்தது. அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த சில அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது தான். 
காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இருவர் தகுதி நீக்கம்





அத்துடன் சுயேச்சை எம்எல்ஏ சங்கரும் பா.ஜனதா வுக்கு ஆதரவு அளித்தார். தற்போது காபந்து முதல்வராக குமாரசாமி உள்ளார். பா.ஜனதா சார்பில் எடியூரப்பா முதலமைச்ச ராக பதவி ஏற்கலாம் என எதிர் பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ -க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தொடங்கி யுள்ளார். முதலாவதாக சுயேச்சை எம்எல்ஏ சங்கரை தகுதி நீக்கம் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் எல் ஜார்கி கோலியையும், மகேஷ் குமதல்லி ஆகியோரை கட்சித்தாவல் சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings