மிகவும் இளம் வயதிலேயே உலகில் உள்ள அத்தனை நாடுகளையும் சுற்றிப் பார்த்துள்ளார் லெக்ஸி அல்ஃபோர்டு. மிகவும் இள வயதில் பெண் ஒருவர் செய்த சாதனை வரலாற்றிலேயே இது தான் முதன்முறை என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் அஸ்கித் என்ற 24 வயது இளைஞர் உலகின் அத்தனை நாடுகளையும் சுற்றிய இளவயதுக்காரர் என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
தற்போது 21 வயதில் லெக்ஸி இச்சாதனையை முறியடித் துள்ளார். கடந்த மே 31-ம் தேதி வடகொரியா சென்ற இவர் அதிகாரப் பூர்வமாக உலகின் அத்தனை நாடுகளையும் சுற்றிய தனது சாதனையைப் பதிவு செய்தார்.
ஃபோர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், லெக்ஸி குடும்பத்தார் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ட்ராவல்ஸ் ஏஜென்ஸி வைத்துள் தாகவும்
இதன் அடிப்படையிலேயே சிறு வயதிலிருந்து உலகில் உள்ள 196 நாடுகளையும் சுற்றி பார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் லெக்ஸி.
Thanks for Your Comments