ஒரு நத்தையால் ஜப்பானில் 26 இரயில்கள் நிறுத்தம் - என்ன நடந்தது?

0
இது உண்மை யிலேயே வினோதமான சம்பவம் தான். ஜப்பானில் நடந்த இந்தச் சம்பவம் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது. ஜப்பானில் பெரும்பாலும் அதிவேகமாக ஓடக்கூடிய புல்லட் ரயில்கள் தான் இயங்கப் படுகின்றன. அப்படிப்பட்ட புல்லட் ரயிலையே ஒரு நத்தை நிறுத்தி யிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஒரு நத்தையால் ஜப்பானில் 26 இரயில்கள் நிறுத்தம்



கடந்த மாதம் 30-ம் தேதி மின்சாரம் துண்டிக்கப் பட்டதால் இரயிலில் பயணித்த 12,000 பயணிகள் பாதிக்கப் பட்டனர். இதனால் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளனர். 
இரயில் வழித்தடத்திலேயே நின்றதால் அடுத்தடுத்து வரவிருந்த 26 ரயில்களின் சேவையும் முடக்கப் பட்டது. பின்னர் பழுது சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப் பட்டன. அதற்கான காரணங்கள் கண்டு பிடிக்கப்படாத நிலையில் நேற்று தான் ஜப்பான் ரயில் சேவை நிறுவனமான ஜே.ஆர் குஷு( JR Kyushu) அதற்கான காரணத்தைக் கண்டு பிடித்துக் கூறியுள்ளது.

இரயில் வழித்தடத்தில் மின்சார பாதிப்பு ஏற்பட்டதற்கு ஏதேனும் கருவி பழுதடைந் திருக்கும் என்று தான் நினைத்தோம். பழுது பார்த்த போது கருவிகள் அனைத்தும் சரியான முறையிலேயே இயங்கின. 



பின் மேலும் ஆராய்ந்ததில் இரயில் பாதையில் மின்சாரம் துண்டிக்கப் பட்டதற்கான காரணம்; எலெக்ட்ரானிக் கருவியில் சிக்கியிருந்த இறந்த நத்தை என்பது பின்பு தான் தெரிந்தது என்று ஜே.ஆர் குஷுரயில்வே நிறுவனம் கூறியுள்ளது. இது போன்ற சம்பவம் மிகவும் அரிதானது என்றும் குறிப்பிட் டுள்ளது.
மேலும் இது போன்ற சம்பவம் தொடராமல் கவனிக்கப்படும் என்றும் தெற்கு ஜப்பான் இரயில் நிறுவனம் கூறியுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings