சென்ட்டிரல் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை நள்ளிரவில் கடத்தி சென்ற நபரை போலீசார் அதிடியாக கைது செய்துள்ளனர். ஒடிசாவை சேர்ந்த தம்பதி ராம் சிங் - நீலாவதி. இவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை சென்ட்ரல் நிலையத்தில் 3 வயது குழந்தை குழந்தையுடன் ரயிலுக்காக காத்திருந்தனர்.
அப்போது மணி இரவு 11.40 ஆகிவிட்டது. அதனால் அவர்கள் 6-ம் எண் பிளாட் பாரத்திலேயே படுத்து தூங்கி விட்டனர். திடீரென கண் விழித்து பார்த்தால் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை காண வில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர்.
சிசிடிவி காட்சிகள்
இதனால் போலீசாரும் உடனடியாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது 12.45 மணி அளவில் ஒரு இளைஞர் தூங்கி கொண்டிருந்த குழந்தையின் அருகில் வந்து நிற்கிறார். அவரது கையில் ரெட் கலரில் ஒரு பை வைத்துள்ளார். பிறகு மெதுவாக குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்கிறார்.
மர்ம நபர்
இந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த நபர் குழந்தையை சென்ட்ரலில் இருந்து தாம்பரம் சென்று அங்கு இறங்கி செல்வதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ரயில்வே போலீசின் ஒரு குழு அனுப்பி வைக்கப் பட்டது.
குழந்தை
அதே போல, திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய முக்கிய ரயில் நிலையங் களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், திருப்போரூரில் காப்பகம் ஒன்றில் அந்த குழந்தை உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
ஒப்படைப்பு
திருப்போரூர் சாலையில் ஒரு குழந்தை தனியாக நின்று கொண்டிருந் ததாகவும், இதை பார்த்த யாரோ ஒரு நபர் அக்குழந்தையை மீட்டு, சைல்டு லைன் மூலம் பரங்கிமலை குழந்தைகள் காப்பகத்தில் நேற்று ஒப்படைத் திருக்கிறார் என்ற தகவலை யடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
சம்பந்தப்பட்ட காப்பகத்தில் இருந்த குழந்தையை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Thanks for Your Comments