சமீபத்தில் நடந்து முடிந்த 2019 உலகக்கோப்பை தொடரில் வேகப் பந்து வீச்சாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்தினர். சில வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என உலகக் கோப்பைக்கு முன்பே கணிக்கப்பட்டு, அதே போல சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர்.
சில வேகப் பந்து வீச்சாளர்கள் தங்களை அடையாளப்ப டுத்திக் கொள்ளும் வாய்ப்பாக உலகக் கோப்பை தொடரை பயன்படுத்திக் கொண்டனர். இதில் நான்கு இளம் வேகப் பந்து வீச்சாளர்கள் தான் அடுத்த சில ஆண்டு களுக்கு கிரிக்கெட் உலகை கலக்குவார்கள் என கருதப் படுகிறது.
அதிக விக்கெட்கள்
உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியது ஆஸ்திரேலியா வின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்தின் லாக்கி பெர்குசன். இவர்கள் இருவரும் 30 மற்றும் 29 வயதை ஒட்டி இருப்பவர்கள். இவர்களை அடுத்து சிறப்பாக பந்துவீசும் இளம் வேகப் பந்து வீச்சாளர்கள் பட்டியல் இதோ
ஜோப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து அணியில் உலகக் கோப்பை தொடருக்கு சில நாட்கள் முன் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனவர் ஜோப்ரா ஆர்ச்சர். உலகக் கோப்பை தொடரில் 11 போட்டிகளில் 20 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார்.
இவரது அச்சுறுத்தும் பந்து வீச்சை கண்டு பேட்ஸ்மேன்கள் மிரண்டனர். அடுத்து வரும் நாட்களிலும் அது தொடரும்.
ரஹ்மான்
வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் மிகவும் சிறப்பாக ஆடியது. அரை யிறுதிக்கு முன்னேறாமல் போனாலும், அந்த அணியின் போராட்டம் பலராலும் பாராட்டப் பட்டது. இளம் வீரர்கள் சிலரும் அபாரமாக செயல்பட்டனர். அதில் ஒருவர் தான் வேகப் பந்து வீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்தாலும், உலகக் கோப்பை தொடரில் 8 போட்டிகளில் 20 விக்கெட்கள் வீழ்த்தி ஒரு புது உச்சத்தை தொட்டுள்ளார். அடுத்த சில ஆண்டுகளுக்கு இவர் இதே பார்மில் நீடிக்க வாய்ப்புள்ளது.
ஷஹீன் ஷா அப்ரிடி
உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் ஆமிர் மீது அனைவரின் கண்களும் இருந்த நிலையில், ஐந்து போட்டிகளில் மட்டுமே ஆடிய ஷஹீன் ஷா அப்ரிடி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார்.
5 போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டினார். இவர் தான் பாகிஸ்தான் அணியின் எதிர்காலம் என்பதில் சந்தேகமே இல்லை.
பும்ரா
உலகக் கோப்பை தொடரில் வழக்கம் போல தன் சிறப்பான, கட்டுக் கோப்பான பந்துவீச்சை வெளிப் படுத்தினார் பும்ரா. நம்பர் 1 ஒருநாள் போட்டிகள் பந்து வீச்சாளராக இருந்தாலும், இவர் இன்னும் இளம் வீரர் தான். 25 வயதே ஆகும் பும்ரா,
சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கி மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இவருக்கு தற்போது இருக்கும் வலுவான போட்டி என்றால் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தான்.
Thanks for Your Comments