7 அடி நீளம்.. அது பாட்டுக்கு போனது.. அலறியடித்து ஓடிய மக்கள் !

0
அது இஷ்டத்துக்கும் தெருவில் கூலாக போய்க் கொண்டிருந்த மலைப் பாம்பை கண்டு பள்ளிப்பட்டு மக்கள் அலறி அடித்து ஓடினார்கள். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு தாலுகாவி ற்கு உட்பட்ட கிராமம் வி.ஜி.ஆர்.புரம் ஆகும். இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 
7 அடி நீளம்.. அது பாட்டுக்கு போனது




இந்த கிராமத்தில் ரொம்ப நாளாக ஒரு பிரச்சனை இருக்கிறது என்றால், தெருக்களில் லைட் எரிவது கிடையாது என்பது தான். காரணம் இந்த கிராமத்துக்கு அருகிலேயே ஒரு மலைப் பகுதியும் உள்ளது என்பதால் தான். 
இதை பற்றி பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங் களில் பலமுறை தெரு மின்விளக்கு இல்லை என்று மனு அளிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் இந்த கிராமத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என தெரிகிறது. 

இந்நிலையில் நேத்து ராத்திரி கிராம மக்களில் பலர் தூங்கி கொண்டிருந் தனர். ஒருசிலரின் நடமாட்டம் மட்டுமே தெருக்களில் காணப்பட்டது. அப்போது, அருகில் இருந்த மலையில் இருந்து 7 அடி உயரம் கொண்ட மலைப்பாம்பு கிராமத்து க்குள் நுழைந்து விட்டது. 

மேலும் அங்குள்ள தெருக்களில் ஊர்ந்து போய் கொண்டிருந் ததை பார்த்து மக்கள் அலறி அடித்து ஓடினர். இது சம்பந்தமாக திருத்தணி வனத்துறைக்கு தகவல் அளிக்கப் பட்டது. விரைந்து வந்த ஊழியர்கள் அரை மணி நேரம் போராடி உயிருடன் அந்த மலைப் பாம்பை பிடித்து எடுத்துச் சென்றனர். 




பாம்பு மட்டு மில்லை.. கிராமத்தில் மின் விளக்குகள் இல்லாததனால் தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் தெருக்களிலும் வீடுகளிலும் உள்ளே புகுந்து விடுமாம். 
இதனால் எப்பவுமே ஒரு பீதியில் வாழ்வதே தங்களுக்கு பிழைப்பாகி விட்டது, என்றும், சீக்கிரமாக இந்த கிராமத்திற்கு மின்விளக்கு அமைத்து தருமாறும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings